பட்டாயாவில் பணத்தை மறுத்த இந்தியரை திருநங்கைகள் செருப்பால் தாக்கிய சம்பவம் – உல்லாசத்துக்குப் பின் தகராறு!
பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், அங்கு இரவு நேரங்களில் பலர் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த இந்தியர் ஒருவர் ஒரு திருநங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.
தாய்லாந்தின் பட்டாயா நகரில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி திருநங்கை ஒருவருடன் உல்லாசமாக இருந்த பின்னர் பேசிய கட்டணத்தை செலுத்தாததால், அந்த திருநங்கை மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரை நடு ரோட்டிலேயே கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், அங்கு இரவு நேரங்களில் பலர் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த இந்தியர் ஒருவர் ஒரு திருநங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் பின்னர் பேசிய தொகையை முழுமையாகச் செலுத்தாமல் தப்பிக்க முயன்றதால், அந்த திருநங்கை கோபமடைந்து சண்டையிடத் தொடங்கினார். உடனடியாக அவரது நண்பர்கள் இருவர் உதவிக்கு வந்து, மூவரும் இணைந்து அந்த இந்தியரை செருப்பால் அடித்துக் கடுமையாக தாக்கினர்.
இச்சம்பவம் டிசம்பர் 27 அன்று அதிகாலை 5.30 மணியளவில் பட்டாயாவின் வாக்கிங் ஸ்ட்ரீட் கடற்கரை நுழைவாயில் அருகே நடந்தது. சவாங் போரிபூன் அறக்கட்டளை மீட்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்தபோது, 52 வயதான இந்தியர் ராஜ் ஜசுஜா என்பவர் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயமடைந்து காணப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்ட பின் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
19 வயதான போங்போல் பூஞ்சித் என்பவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ராஜ் மற்றும் திருநங்கை இடையே வாக்குவாதம் முதலில் ஏற்பட்டு, பின்னர் அது உடல் மோதலாக மாறியதாக தெரிவித்தார். தகராறுக்கு முக்கியக் காரணமாக இந்திய சுற்றுலாப் பயணி பேசிய தொகையை செலுத்தாதது சுட்டிக்காட்டப்படுகிறது.
இதற்கு முன்பும் பட்டாயாவில் இந்தியர்கள் மற்றும் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் இடையே பல தகராறுகள் பதிவாகியுள்ளன. செப்டம்பரில் ஒரு இந்தியர் அனுமதியின்றி தொட்டதற்காக தாக்கப்பட்டார். அக்டோபரில், பணத் தகராறில் மூன்று திருநங்கைகள் இரு இந்தியர்களை ஹோட்டலில் தாக்கி 69,000 ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர். போலீசார் இச்சம்பவங்கள் அனைத்தையும் சிசிடிவி காட்சிகளுடன் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராஜ் ஜசுஜா முழுமையாக குணமடைந்த பின் அவரிடம் முறைப்பாடு பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Editorial Staff