த்ரிஷா முதல் சினேகா வரை – பிரபல நடிகைகளுக்கு சேலை கட்டும் திவ்யன் ஜெயரூபன் யார்?

Published on: 12 Dec 2025, 05:45 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சினேகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டும் வீடியோவைப் பகிர்ந்து, அவரை அன்புடன் ஹக் செய்து பாராட்டிய காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் கலந்து கொண்டார்.

த்ரிஷா முதல் சினேகா வரை – பிரபல நடிகைகளுக்கு சேலை கட்டும் திவ்யன் ஜெயரூபன் யார்?

சமீபத்தில் நடைபெற்ற "மார்வலஸ் மார்கழி" என்ற ராம்ப்வாக் நிகழ்ச்சியில் நடிகை சினேகா, பட்டு சேலையில் ராஜமாதா போல அழகுடன் கலந்து கொண்டார். அவரது இந்த அற்புதமான தோற்றத்திற்கு பின்னால் ஒரு முக்கிய நபர் இருக்கிறார் – பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன். சினேகாவின் அந்த டபுள் டிராப் சேலையை திறமையாக கட்டி வைத்தது அவர் தான்.

சினேகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டும் வீடியோவைப் பகிர்ந்து, அவரை அன்புடன் ஹக் செய்து பாராட்டிய காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் சினேகா, தனது கணவர் பிரசன்னாவுடன் கலந்து கொண்டார்.

திவ்யன் ஜெயரூபன் என்பவர் தமிழ்த் திரையுலகில் மிகவும் பிரபலமான டிராப்பிஸ்ட். சினேகா மட்டுமல்ல, த்ரிஷா, விஜே பிரியாங்கா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுக்கும் அவர் சேலை, கவுன் உள்ளிட்ட ஆடைகளை சரியாக அணிவித்து அழகுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த நடிகைகளின் பிரமாண்டமான ரெட் கார்ப்பெட் லுக்குகளுக்கு பின்னால் நடக்கும் சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன.

சினேகா தற்போது சினிமா, சின்னத்திரை என பல துறைகளிலும் பிஸியாக உள்ளார். அதுமட்டுமல்லாமல், நயன்தாரா, சமந்தா போலவே தொழில் துறையிலும் காலூன்றி, "சினேகாலயா" என்ற பெயரில் தனியாக துணிக்கடைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு அவரது அழகான தோற்றத்திற்கு பின்னணியில் திவ்யன் ஜெயரூபன் போன்ற திறமைசாலிகளின் பங்களிப்பும் பெரிது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW