"நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது" – மதுரோ கைதுக்குப் பிறகு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா வெளியிட்ட அறிக்கை

ஜூலை 2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், வெனிசுலாவின் தேசிய தேர்தல் கவுன்சில் மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இருப்பினும், அந்த அறிவிப்பு பரவலான சர்ச்சைக்குள்ளானது.


"நாட்டிற்கு சுதந்திர நேரம் வந்துவிட்டது" – மதுரோ கைதுக்குப் பிறகு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா வெளியிட்ட அறிக்கை

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, "எனது நாட்டிற்கு இறுதியாக சுதந்திரத்தின் நேரம் வந்துவிட்டது" என அறிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான Xஇல் அவர் வெளியிட்ட பதிவில், எதிர்க்கட்சி வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியா உடனடியாக தனது அரசியலமைப்பு ஆணையை ஏற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், வெனிசுலாவின் தேசிய தேர்தல் கவுன்சில் மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இருப்பினும், அந்த அறிவிப்பு பரவலான சர்ச்சைக்குள்ளானது. சைபர் தாக்குதல் காரணமாக வாக்குச் சாவடிகளில் இருந்து சரியான வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனால், உண்மையான வெற்றியாளர் எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியா என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வாதிட்டு வந்தனர்.

மச்சாடோ, கடந்த 11 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர். கடந்த மாதம் அவர் பொது வெளியில் மீண்டும் தோன்றினார். அதன்பிறகு நோர்வே சென்று, அங்கு அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

அவரது அணுகுமுறையும், வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்கும் போராட்டமும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளன. மதுரோவின் கைது மற்றும் மச்சாடோவின் இந்த அறிக்கை, வெனிசுலாவின் அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க