கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு

Published on: 10 Nov 2025, 05:17 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நாயகனாக வலம் வரும் கவினுக்கு‘லிப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’ போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘கிஸ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா ஜெரெமியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிரெய்லரை பார்க்கும் போது, திரில்லர் கலந்த ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் கூடிய படமாக ‘மாஸ்க்’ உருவாகியுள்ளது தெரிகிறது. 

கவினின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் டிரெய்லரை மேலும் கவர்ச்சிகரமாக்கியுள்ளது.

‘மாஸ்க்’ படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டையொட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW