ஜனாதிபதி மாளிகையில் ரகசியமாக பதுக்கப்பட்ட 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட மரகத கல்

Published on: 22 Nov 2025, 07:34 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மடகாஸ்கர் தலைநகர் ஆண்டானனரிவோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சுமார் 300 கிலோ எடையுள்ள அபூர்வமான மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் ரகசியமாக பதுக்கப்பட்ட 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட மரகத கல்

மடகாஸ்கர் தலைநகர் ஆண்டானனரிவோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சுமார் 300 கிலோ எடையுள்ள அபூர்வமான மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.

இதைப் பற்றிய தகவலை இடைக்கால ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியரினா வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கூறுகையில், இந்த மிகப்பெரிய மரகதம் தேசிய பொக்கிஷத்துக்குச் சொந்தமானதாக இருந்தும், அது மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அரசு கருவூலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், சர்வதேச நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற புதிய நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில், மாளிகையில் கைப்பற்றப்பட்ட மரகதக் கல்லை அரசு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏலத்திற்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெருமதிப்புள்ள கல் ஏன் மற்றும் எந்த நோக்கத்திற்காக அங்கு மறைக்கப்பட்டிருந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று அவர் கூறினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW