குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5000 வரவு: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முக்கிய அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பலரின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5000 வரவு: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முக்கிய அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பலரின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ.31.5 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சுமார் 1.30 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை முன்மாதிரியாக கொண்டு டெல்லி, புதுச்சேரி, பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கியது. அதேபோல் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பையும் வழங்கியது.

இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ரூ.3,000 தொகையுடன் கூடுதலாக கோடைக்கால நிவாரணமாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி அரசும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களில் சுமார் 63,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகையை சேர்த்து மொத்தம் ரூ.5,000 அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் உத்தரவின்படி இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மொத்தம் ரூ.31.5 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை காரணமாக தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுவதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர