2026 உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை: கனடா முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் கனடா ஒரு இடம் முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையை மதிப்பீடு செய்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் Henley Passport Index பட்டியலில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்கு முன்கூட்டிய விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

இரண்டாவது இடத்தை ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

முன்னதாக எட்டாவது இடத்தில் இருந்த கனடா, இந்த ஆண்டில் ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது. கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 182 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

இந்த பட்டியலில் பிரித்தானியா ஆறாவது இடத்திலும், அமெரிக்கா பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர