சுக்கிரன்–சனி இணைவு: சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்; உங்க ராசி என்ன?
ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் சனி கிரகங்கள் இரண்டும் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரு கிரகங்களின் இணைவு வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஹோலி பண்டிகைக்கு முன்னதாக சுக்கிரன் மீன ராசியில் சனியுடன் இணைகிறார். இந்த கிரக சேர்க்கை சில ராசியினருக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிஷப ராசியினருக்கு இந்த இணைவு பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாய்ப்பை உருவாக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் குறையலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றும், குடும்பம் மற்றும் பணியிடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிதுன ராசியினருக்கு மனஅழுத்தம் மற்றும் குழப்பங்கள் குறையும் காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கலாம். வேலைப்பளு குறைந்து, சொத்து மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் தீர்வு காணலாம் என நம்பப்படுகிறது.
துலாம் ராசியினருக்கு இந்த கிரக இணைவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்பு இருக்கலாம். சமூக மரியாதை மற்றும் அந்தஸ்து உயரலாம். வியாபாரத்தில் கடின உழைப்புக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
