சந்திர கிரகணம் 2026: மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.... கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி நிகழ உள்ளது. இந்தியாவில் பகுதியாகத் தெரியும் என கூறப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.


சந்திர கிரகணம் 2026: மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.... கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி நிகழ உள்ளது. இந்தியாவில் பகுதியாகத் தெரியும் என கூறப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. மத மரபுகளின்படி, கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் அமைதியாக இருப்பது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. மன அமைதியும் ஓய்வும் தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தைக்கு நல்லது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

கிரகண நேரத்தில் இறைநாமம் ஜபிப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. “ஓம் நம சிவாய”, காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களை உச்சரிப்பது நல்ல பலன் தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம் போன்ற பாராயணங்களைப் படிப்பதும் அல்லது கேட்பதும் ஆன்மிக நன்மையை தரும் என்று கூறப்படுகிறது.

சில மரபுகளில், கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வயிற்றில் திருநீறு பூசுவது கருவைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், கிரகண கதிர்கள் பாதிக்கக்கூடும் என்பதால் ஜன்னல், கதவுகளை மூடி வீட்டிற்குள் இருப்பது நல்லது என கூறப்படுகிறது.

கூர்மையான பொருட்கள் போன்ற கத்தி, கத்தரிக்கோல், ஊசி ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது சாஸ்திர வழக்கம் என கூறப்படுகிறது. திறந்த வெளியில் நின்று கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பதையும் தவிர்க்கச் சொல்வார்கள். இந்த நேரத்தில் தூங்குவதற்குப் பதிலாக தியானம் அல்லது இறை வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது என நம்பப்படுகிறது.

சூதக காலத்தில் சமைப்பதையும் உணவருந்துவதையும் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் உள்ளது. கிரகணத்திற்கு முன் சமைத்த உணவில் துளசி இலை அல்லது தர்ப்பை புல் சேர்த்து வைப்பது வழக்கமாகும். இது உணவு கெடாமல் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

கிரகணம் முடிந்த பிறகு குளித்து, கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது என கூறப்படுகிறது. வெளியே செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி இறைவனை வணங்கலாம். போதுமான தண்ணீர் குடித்து உடல்நலத்தை கவனித்துக்கொள்வதும் அவசியம். அமைதியாக அமர்ந்து புத்தகம் படிப்பது அல்லது மென்மையான இசை கேட்பதும் மன அமைதிக்குச் சிறந்ததாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள், ஜோதிடக் கருத்துகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இவை அறிவியல் ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. எந்தவொரு ஆரோக்கிய தொடர்பான ஆலோசனைக்கும் மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க