87 வயதில் தந்தையான சீன ஓவியர்! 37 வயது மனைவிக்கு ஆண் குழந்தை பிறப்பு
சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் ஜெங், 87 வயதில் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது 37 வயது மனைவி சூ மெங் டிசம்பர் 11, 2025 அன்று ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றெடுத்தார்.
சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் ஜெங், 87 வயதில் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது 37 வயது மனைவி சூ மெங் டிசம்பர் 11, 2025 அன்று ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றெடுத்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதி தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஃபேன் ஜெங், ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். தற்போது சூ மெங்குடன் திருமண வாழ்க்கையில் உள்ளார். ஓவியக் கலையில் சீனாவிலும் ஆசியாவிலும் பெரும் புகழ் பெற்றவரான ஃபேன் ஜெங், 2008 முதல் 2024 வரையான தனது ஓவியங்களின் தொகுப்பு ஒன்று சமீபத்தில் ₹5,000 கோடி (சுமார் $600 மில்லியன்) என்ற பேரளவில் ஏலத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண் குழந்தை பிறப்பு, ஃபேன் ஜெங்கின் தந்தையாதலின் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், வயதான நபர்களின் குடும்ப வாழ்க்கை, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பெற்றோராவதல் போன்ற சமூக விவாதங்களுக்கும் இந்த சம்பவம் வித்திட்டுள்ளது.
Editorial Staff