முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் 'குலா' முறை.. வெளியான தகவல்

குலா முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்து கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் 'குலா' முறை.. வெளியான தகவல்

முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெற அனுமதிக்கும் ‘குலா’ முறை தொடர்பான வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 22ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

இந்த வழக்கில், குலா முறையின் கீழ் விவாகரத்து பெற நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயமா என்ற கேள்வியும், அந்த முறையில் விவாகரத்து பெற்ற பெண்கள் பின்னர் ஜீவனாம்சம் கோர முடியுமா என்பதையும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

முன்னதாக, குலா முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்து கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்காக மூத்த வழக்கறிஞர் ஷோயப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமைகள் குறித்து முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர