விமான ஊழியர்களுக்கு மிட்டாய் கொடுத்த பயணி... அடுத்து நடந்த அதிர்ச்சி

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று விமான ஊழியர்கள், ஒரு பயணி வழங்கிய மிட்டாய்களைச் சாப்பிட்டதன் பின்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்கு பயணித்த விமானத்தில் இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணி வழங்கிய மிட்டாய்களை விமானம் தரையிறங்கிய பிறகு ஊழியர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடல்நலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த மிட்டாய்களில் கஞ்சா கலந்திருந்தது தெரியவந்தது. அந்த மிட்டாய்களில் போதைப் பொருள் இருப்பதை விமான ஊழியர்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், கஞ்சா கலந்த மிட்டாய்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பயணியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

விமான ஊழியர்கள் அறியாமலேயே அந்த மிட்டாய்களை எடுத்ததால், அவர்களுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர