சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது
வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான இந்தச் சுக்கிரன், குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அவரது நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். மேலும், அவர் ரோகிணி நட்சத்திரத்திலும் இருக்கிறார். இந்நிலையில், மே 8 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் நுழைவது சிலருக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். வேத நாட்காட்டியின்படி, சுக்கிரன் மே 8 முதல் மே 20 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் இருக்கும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வம் இரட்டிப்பாவதையும் எதிர்பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி பல வழிகளிலும் நல்ல பலன்களையும், செல்வத்தையும் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்களும், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். நிதி நிலை வலுவடையும். பணியில் அலைச்சலும் கடின உழைப்பும் தேவைப்பட்டாலும், வெற்றியும் லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். செல்வம் வேகமாக உயரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இது வெறும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு ஜோதிட நோக்கத்திற்காகவும் செயல்படுவதற்கு முன் சான்றளிக்கப்பட்ட நிபுணரை அணுகவும்.)