பிரித்தானியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளை நாடுகடத்த தீர்மானம்
பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் முன்வைத்திருக்கும் இந்த மாற்றம், அகதி நிலை முடிந்த பின்னரும், குழந்தை பிரித்தானியாவில் பிறந்ததை ஆதாரமாகக் கொண்டு அங்கே தங்க முயலும் குடியேற்றவாசிகளைத் தடுக்கிறது.
இந்த திட்டம், குடும்பத் திட்ட முடிவுகளிலும் அரசின் தலையீடு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
தற்போதைய சட்டப்படி, பிரித்தானியாவில் பிறந்த குழந்தை தானாகவே குடியுரிமை பெறுவதில்லை. பள்ளிப் பருவம் உட்பட முதல் 10 ஆண்டுகளை அந்நாட்டில் வாழ்ந்த பிறகே குடியுரிமைக்கு தகுதி பெறுகிறது.
இதனால, குழந்தையை காரணம் காட்டி புகலிட அமைப்பை தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Editorial Staff