ஆஸ்திரேலியாவில் சோகம்... சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் மன்விதா தரேஷ்வரும், அவரின் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் சாலையில் நடைப்பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு கார் நிறுத்துமிட நுழைவாயிலைக் கடக்க முயன்ற மன்விதா அருகே ஒரு கார் வந்தது. அதே நேரத்தில், பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் அந்த வாகனத்தை மோதியது. மோதல் தாக்கத்தில் முன்னிருந்த கார் தள்ளிச் சென்று மன்விதாவை பலத்தடியாக முட்டியது.

கடுமையாக காயமடைந்த மன்விதா உடனே அருகிலிருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காததால் அவர் மற்றும் அவரின் கருவில் இருந்த குழந்தை இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்காக இரு வாகன ஓட்டிகளிடமிருந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான முறையில் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்கும், கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதற்கும், கருவிழப்பை ஏற்படுத்தியதற்கும் எதிராக பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.