கனடா பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்! 2.45 மில்லியன் டொலர் பரிசு

Published on: 19 Nov 2025, 07:40 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஃபிட்ஸ்ராய் ஹார்பரில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், மிகப்பெரிய ‘Catch the Ace’ லொத்தரில் வரலாற்று வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார். 

கனடா பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!  2.45 மில்லியன் டொலர் பரிசு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஃபிட்ஸ்ராய் ஹார்பரில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், மிகப்பெரிய ‘Catch the Ace’ லொத்தரில் வரலாற்று வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார். 

ரஸ்ஸல் கின் கிளப் நடத்தும் இந்த லொத்தர் போட்டியில் அவர் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெற்றி குறித்து தனது உணர்வுகளை பகிர்ந்த ஷெல்லி, “இன்னும் நம்ப முடியவில்லை… மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த லொத்தரிக்காக 86,000-க்கும் மேற்பட்ட சீட்டுகள் விற்கப்பட்டிருந்ததாகவும், இதை ஒரு தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லொத்தர் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி, சமூக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு நன்மை பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW