ஐயப்பன் குடிகொள்ளும் சபரிமலை
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது மிகவும் பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.
அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக, அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவம் இருந்து வழிபட்டனர். அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், “விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்” என்று வேண்டினர். அதன்படியே தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார்.
அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர். அந்த சக்தியே, ‘மகா சாஸ்தா’. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.
அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.
தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்த மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே ‘சபரிமலை’ என போற்றப்படுகிறது.
பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும், மாளிகைப்புறத்தம்மன், கன்னிமூல கணபதி, வாவர் சுவாமி, கடுத்தசுவாமி ஆகிய துணை தெய்வங்களும் உள்ளன.
மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகத்துக்கு பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா), பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் ‘அஷ்டாபிஷேகம்’ என்று வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் ‘தத்வமஸி’ என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ‘நீயும் கடவுள்’ என்று பொருள். மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் ‘ஹரிவராசனம்’ பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும்.
சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக் குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஒரே மனதுடன், ஒரே மந்திரத்தை உச்சரித்தப்படி சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஆலயத்தின் அடிப்படை.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது மிகவும் பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது.
இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.
அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக, அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவம் இருந்து வழிபட்டனர். அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், “விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்” என்று வேண்டினர்.
அதன்படியே தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர். அந்த சக்தியே, ‘மகா சாஸ்தா’. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.
அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.
தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்த மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே ‘சபரிமலை’ என போற்றப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும், மாளிகைப்புறத்தம்மன், கன்னிமூல கணபதி, வாவர் சுவாமி, கடுத்தசுவாமி ஆகிய துணை தெய்வங்களும் உள்ளன.
மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும்.
சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகத்துக்கு பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா), பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் ‘அஷ்டாபிஷேகம்’ என்று வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் ‘தத்வமஸி’ என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ‘நீயும் கடவுள்’ என்று பொருள். மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் ‘ஹரிவராசனம்’ பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும்.
சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக் குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஒரே மனதுடன், ஒரே மந்திரத்தை உச்சரித்தப்படி சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஆலயத்தின் அடிப்படை.
Editorial Staff