கனடிய முன்னாள் அமைச்சருக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்ட உயர் பதவி

Published on: 21 Nov 2025, 09:24 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடாவின் முன்னாள் துணை பிரதமரும், முக்கிய அரசியல் தலைவருமான கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரித்தானியாவின் புகழ்பெற்ற Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடிய முன்னாள் அமைச்சருக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்ட உயர் பதவி

கனடாவின் முன்னாள் துணை பிரதமரும், முக்கிய அரசியல் தலைவருமான கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரித்தானியாவின் புகழ்பெற்ற Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பொறுப்பு 2026 ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரும் என அறக்கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய பொறுப்பை மேற்கொள்வதற்காக ஃப்ரீலாண்ட் ஆக்ஸ்ஃபோர்டுக்கு குடிபெயர உள்ளதாக ரோட்ஸ் டிரஸ்ட் பேச்சாளர் பபெட் லிட்டில்மோர் தெரிவித்தார்.

எனினும், தற்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்கிறார்; பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. அவரது அலுவலகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் உள்ளது.

அவரது தொகுதியின் லிபரல் கட்சி அமைப்பும், அவர் எப்போது விலகுவார் அல்லது இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்ற விவரங்கள் பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ரோட்ஸ் உதவித்தொகை பெற்றவராக இருந்த ஃப்ரீலாண்ட், ரோட்ஸ் புலமைப் பரிசில் தனது வாழ்க்கை மற்றும் தொழிலில் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். இப்போது அதே அமைப்பை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1990களின் தொடக்கத்தில் ஃப்ரீலாண்ட் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW