அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

Published on: 05 Nov 2025, 08:56 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

இந்தியாவின் - தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பேருந்து மீது கற்கள் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். 

 இந்தநிலையில் குறித்த விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த மூன்று இளைய சகோதரிகள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடலங்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW