தமிழர் பகுதியில் கடைக்கு முன்னாள் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
ஆரம்ப விசாரணைகளின்போது, சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த, வயது 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஆக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – தோனா பகுதியில் அமைந்துள்ள கடலூர் முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கடையின் முன்பு இன்று காலை ஆண் ஒருவரின் சடலத்தை கிண்ணியா பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின்போது, சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த, வயது 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஆக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிகப்பு நிற சட்டை மற்றும் சாம்பல்-கருப்பு கோடு கொண்ட சாரம் அணிந்த நிலையில் அவரது உடல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பயன்படுத்தியதாக கருதப்படும் கை தடி (walking stick) சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த இரவு உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். காலை நேரத்தில் சடலத்தை கண்ட பொதுமக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவத்திற்கான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Editorial Staff