கேரளாவில் மூளை உண்ணும் அமீபா தொற்று : சபரிமலை பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற திறந்த நீர்நிலைகளில் குளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவின் சில பகுதிகளில் மூளையை தாக்கும் அபாயகரமான அமீபா தொற்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ எனப்படும் இந்த உயிர்க்கொல்லி நோய், பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும் அரிய அமீபா மூலம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற திறந்த நீர்நிலைகளில் குளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் புகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும், தேவையற்ற நீராடலை தவிர்க்க வேண்டும் என்பதையும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்திய ஊடகங்கள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
Editorial Staff