வெற்றிக்காக காத்திருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை – வினுஷா தேவி!

டிக்டாக், மாடலிங் போன்ற தளங்களில் செயல்பட்டு வந்த வினுஷாவுக்கு, விஜய் டிவி தான் சின்னத்திரையில் முதல் வாய்ப்பை வழங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


வெற்றிக்காக காத்திருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை – வினுஷா தேவி!

விஜய் டிவியின் பிரபல சீரியலான 'பாரதி கண்ணம்மா' மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் வினுஷா தேவி. இந்த தொடரில் முதலில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாக நடித்து வந்தார். அவர் விலகிய பிறகு, வினுஷா தேவி அந்த பாத்திரத்தில் எண்ட்ரி கொடுத்து, தொடர்ந்து கண்ணம்மாவாகவே நடித்தார். அத்தொடர் முடிவடைந்த பிறகு, 'பாரதி கண்ணம்மா 2' என்ற புதிய தொடர் தொடங்கப்பட்டது. அதில் சிபு சூர்யன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வினுஷா மீண்டும் கண்ணம்மாவாக நடித்தார். ஆனால், அந்த தொடர் வெறும் 6 மாதங்களில் அவசரமாக முடிக்கப்பட்டது.

அதன் பிறகு, 'பனி விழும் மலர்வனம்' என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்தார். சித்தார்த் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த தொடர் 9 மாதங்கள் ஒளிப்பரப்பாகியது. ஆனால், குறைந்த TRP ரேட்டிங் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, வினுஷா பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். ஆனால் சில வாரங்களிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதுவரை சின்னத்திரையில் ஒரு முழுமையான வெற்றியை கைப்பற்றாமல், வினுஷா தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

டிக்டாக், மாடலிங் போன்ற தளங்களில் செயல்பட்டு வந்த வினுஷாவுக்கு, விஜய் டிவி தான் சின்னத்திரையில் முதல் வாய்ப்பை வழங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளித்திரை மற்றும் வலைத் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். ஆனால், சின்னத்திரையில் அவருக்கு இன்னும் உண்மையான வெற்றி அமையவில்லை.

இந்நிலையில், மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் வினுஷா லீட் ரோலில் நடிக்கிறார். "சுட்டும் விழி சுடரே" என்று பெயரிடப்பட்ட இந்த தொடரில், 10 வயது சிறுமிக்கு அவர் அம்மாவாக நடிக்கிறார். செய்யாத குற்றத்திற்காக சிறையில் உள்ள தனது அம்மாவை மீட்க ஒரு சின்ன குழந்தை போராடும் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், தெலுங்கு சீரியல் 'சின்னி'யின் ரீமேக் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் இந்த தொடர் மூலமாக வினுஷாவுக்கு இறுதியாக ஒரு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்து, அவருக்கு ஆதரவாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க