பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு - ராஜபக்சர்களுக்கு பேரிடி!
ராஜபக்ஷ குடும்பத்துக்கு புதிய அதிர்ச்சி அளிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (மே 22) உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி, 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஏற்கனவே வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றில் ஆஜராகாததால், நீதிபதி அவருக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு கடுமையான பின்னடைவாக கருதப்படுகிறது.