யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் மரணம்: வெளியானபகீர் தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.


யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் மரணம்: வெளியானபகீர் தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபனின் மரணம் குறித்த பகீர் உண்மை நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் மரண விசாரணை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் மே 20 நடைபெற்றது. விசாரணையின் போது, உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் காவல்துறையினரும் சாட்சியம் வழங்கினர்.

சாட்சியமளித்த காவல்துறையினர், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீது சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையானார். முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியதுடன், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க