நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் கேரட் – இஞ்சி சூப்!

நோயைத் எதிர்த்துப் போராடவும் தொண்டைக்கு இதமளிக்கவும் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் ஒரு சிறந்த தீர்வு இஞ்சி – கேரட் சூப்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் கேரட் – இஞ்சி சூப்!

நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் உறுதியாக, வலுவாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நோயெதிர்ப்பு ஆற்ற அதிகரிப்பது, மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவை தான் நோய்த் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

நோயைத் எதிர்த்துப் போராடவும் தொண்டைக்கு இதமளிக்கவும் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் ஒரு சிறந்த தீர்வு இஞ்சி – கேரட் சூப்.

​கேரட் – இஞ்சி சூப் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

கேரட் – 2

இஞ்சி – 2 இன்ஞ் அளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

வெங்காயம் – 1

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

பூண்டு – 6 பல்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – அலங்கரிக்க

​சூப் செய்யும் முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கேரட்டை சேருங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் 5 நிமிடங்கள் வரை இதை வேகவிடுங்கள். அடுத்ததாக இதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளைச் சேருங்கள்.

இப்போது சிறிதளவு (சூப்பிற்கு தேவையான அளவு) தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து நன்கு 15 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.

நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறவிடுங்கள். ஆறியதும் இதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துப் பின் வடிகட்டினால் சூப் ரெடி.

மேலே கொத்தமல்லி இலைகளும் சிறிது மிளகுத் தூளும் தூவிக் கொள்ளுங்கள். வேண்டுமானால் 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து லேசாக சூடானதும் வெதுவெதுப்பாக குடிக்கலாம்.

​கேரட் – இஞ்சி சூப் குடிப்பதன் நன்மைகள்

  • இந்த சூப்பில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருக்கிறது.
  • இந்த சூப்பை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மங்கலான கண் பார்வையும் தெளிவடையும்.
  • இஞ்சியில் அதிக அளவில் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் இது சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது.
  • அதோடு தொற்றுக்களின் பாதிப்பை சரிசெய்யும்.
  • இந்த சூப் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது.

​கேரட்டின் பயன்கள்

  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய் என்றால் அது கேரட் தான். கேரட்டை பச்சையாக, சமைத்து, ஜூஸாக என பல வழிகளில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.
  • கேரட்டில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் மற்றும் நிறைய ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.
  • கேரட் நம்முடைய குடலில் கிருமிகளைத் தங்கவிடாமல் அழிக்கும் தன்மை கொண்டது. அதோடு ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலை பலப்படுத்தும்.
  • மாலைக்கண் பிரச்சினையைப் போக்கி கண் பார்வையை தெளிவாக்கும்,
  • மூட்டு வலியை சரிசெய்ய உதவுகிறது.
  • சருமத்தை ஆரோக்கியமாகவும் நல்ல பொலிவுடனும் வைத்திருக்க உதவும்.
  • மரபணுக்களால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலும் கேரட்டில் உண்டு.
  • ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து இதயத்தை பலப்படுத்தும்.
  • பற்களை பலப்படுத்தும்.
  • இவையெல்லாவற்றுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வலுவானதாகவும் வைத்திருக்க உதவும்.

​இஞ்சியின் மருத்துவ குணங்கள்

  • இஞ்சியை காய்கறிகளில் சேர்ப்பதில்லை. அதை ஒரு மூலிகையாகவும் மசாலாப் பொருளாகவும் தான் பார்க்கிறோம்.
  • இஞ்சியில் வைட்டமின் சி, மினரல்கள் மற்றும் பிற தாதுக்களும் அடங்கியிருக்கின்றன.
  • இஞ்சியில் ஆன்டி – செப்டிக், ஆன்டி – வைரல், ஆன்டி – பயோடிக் பண்புகள் நிறைந்திருக்கின்றன.
  • இஞ்சி இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் குடல் வீக்கம் போன்றவற்றையும் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.
  • இஞ்சியில் உள்ள அதிக அளவிலான கால்சியம் மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.
  • தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முதன்மையான தீர்வு என்றால் அது இஞ்சி தான்.
  • இஞ்சி இதயத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.