முதலைகள் கற்களை விழுங்குவது ஏன்? விஞ்ஞானம் சொல்லும் ஆச்சரியமான 2 காரணங்கள்!

உலகின் மிக ஆபத்தான ஊர்வனவற்றில் ஒன்றான முதலைகள், வேண்டுமென்றே கற்களை விழுங்குகின்றன. இதற்கு செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் நீருக்கடியில் நீண்ட நேரம் இருக்க எடையை அதிகரித்தல் என இரண்டு முக்கிய அறிவியல் காரணங்கள் உள்ளன.
முதலைகள் கற்களை விழுங்குவது ஏன்? விஞ்ஞானம் சொல்லும் ஆச்சரியமான 2 காரணங்கள்!

உலகின் மிகவும் வினோதமான மற்றும் அதேசமயம் உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக முதலை கருதப்படுகிறது. பொதுவாக ஆறுகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும் இந்த ஊர்வன, மற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி உண்ணும் கொடூரமான பழக்கத்தைக் கொண்டவை. ஆனால், இவற்றின் உணவுப் பழக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு விஷயம் உள்ளது; அது என்னவென்றால், முதலைகள் விரும்பி சாப்பிடும் மற்றொரு பொருள் கற்கள். இந்தப் பழக்கம், வேறு எந்த விலங்குகளிடமும் அப்படியொன்றைக் காண முடியாது.

கேட்பதற்கு நம்பமுடியாததாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மைதான். நீர்நிலைகளில் வாழும் முதலைகள் தற்செயலாக அல்ல, மாறாக வேண்டுமென்றே கற்களை விழுங்குகின்றன. பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் இந்த புதிரான பழக்கத்தை ஆராய்ந்து வருகின்றனர், இதற்குப் பின்னால் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் அறிவியல் பூர்வமான காரணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். முக்கியமாக, முதலைகள் இரண்டு முதன்மையான காரணங்களுக்காக கற்களை உட்கொள்கின்றன: முதலாவது உணவை செரிமானம் செய்ய உதவுதல், இரண்டாவது தண்ணீருக்கடியில் நீண்ட நேரம் மூழ்கியிருக்க உதவுதல்.

முதலையின் வயிற்றில் காணப்படும் இந்த கற்கள் விஞ்ஞான மொழியில் 'காஸ்ட்ரோலித்' (Gastrolith) என்று அழைக்கப்படுகின்றன. இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவான சொல்லாகும், இதில் 'காஸ்ட்ரோ' என்பது வயிறு என்றும், 'லித்தோஸ்' என்பது கல் என்றும் பொருள்படும். முதலைகள் பொதுவாக தங்கள் இரையை மென்று சாப்பிடுவதில்லை; மாறாக, இறைச்சி, எலும்புகள் மற்றும் கடினமான ஓடுகள் போன்றவற்றை பெரிய துண்டுகளாக கிழித்து முழுமையாக விழுங்கிவிடுகின்றன. இந்த கடினமான உணவுகளை செரிமானம் செய்வது அவற்றிற்கு கடினமான சவாலாகும். இங்குதான் கற்கள் உதவிகரமாகின்றன.

முதலைகளின் உடலில் 'கிஸார்ட்' (Gizzard) எனப்படும் மிகவும் வலிமையான தசைநார்கள் கொண்ட ஒரு சிறப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி ஒரு இயற்கையான அரைக்கும் இயந்திரமாக செயல்படுகிறது. முதலை கற்களை விழுங்கும்போது, அந்த கற்கள் கிஸார்ட் பகுதிக்குள் சேமிக்கப்பட்டு, உணவு அங்கு செல்லும்போது அந்த தசைச் சுருக்கங்களுடன் இணைந்து கற்கள் உணவை நன்கு நொறுக்கி சிறு துகள்களாக மாற்றுகின்றன. இது உணவை எளிதில் செரிமானம் செய்யவும், அதிலுள்ள சத்துக்களை உடல் எளிதில் உறிஞ்சி ஆற்றலாக மாற்றவும் பெரிதும் உதவுகிறது.

நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய முதலைகள், தங்களின் பெரும்பாலான நேரத்தை நீருக்குள்ளேயே கழிக்கின்றன. ஆனால், அவற்றின் நுரையீரலில் காற்று நிறைந்திருப்பதால் அவற்றின் உடல் மிதக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த இலகுவான உடல் எடையானது, அதிக சக்தியை செலவழிக்காமல் நீருக்கடியில் நிலையாக இருக்கும் திறனைக் குறைக்கிறது. இந்தப் பிரச்சினைக்கும் கற்கள்தான் சிறந்த தீர்வாகின்றன. கற்களை உட்கொள்வதால் முதலைகளின் உடல் எடை கூடுதலாகிறது, இது புவியீர்ப்பு விசையை அதிகரித்து, அவை மிகக் குறைந்த ஆற்றலிலேயே நீருக்கடியில் நிலைத்து இருக்க உதவுகிறது.

இது குறித்து விஞ்ஞானிகள் முதலைகளின் நெருங்கிய உறவினர்களான இளம் அமெரிக்க அலிகேட்டர்கள் மீது ஒரு சோதனை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், பெரும்பாலான அலிகேட்டர்கள் தங்களுடைய உடல் எடையில் சுமார் 2.5 சதவீதம் அளவுள்ள கிரானைட் கற்களை தாங்களாகவே உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை உண்ணும் முன்பை விட, உண்ணும் பிறகு அவற்றால் நீருக்கடியில் மிக நீண்ட நேரம் இருக்க முடிந்தது. உடல் எடையில் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே கல் இருக்கும்போதே, முதலைகளால் தண்ணீருக்கடியில் இருக்கும் நேரத்தை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரிக்க முடிவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தந்திரோபாயம், வேட்டையாடும் போதும், எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும்போதும் தங்களை மறைத்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கற்கள் முதலைகளின் உடலில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்வதில்லை. உணவை அரைப்பதற்கு நீண்ட காலமாக பயன்படுத்தி மழுங்கிவிட்ட கற்களையோ அல்லது இனி தேவைப்படாத கற்களையோ அவற்றால் வாய் வழியாக மீண்டும் வெளியேற்ற முடியும். இந்த செயல்முறை மூலம், பழைய கற்களை அகற்றிவிட்டு, தங்களின் தேவைக்கு ஏற்ப புதிய கற்களை எடுத்துக்கொண்டு, செரிமானத்திற்கும் நீரில் மூழ்கும் திறனுக்குமான உத்தியைத் தொடர்ந்து பராமரிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர