2026 றமழான் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை – அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு

வேலை நேரங்களை மாற்றி அமைத்து வழிபாட்டு நேரத்திற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


2026 றமழான் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை  – அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு

2026ஆம் ஆண்டு றமழான் மாதத்தின் போது முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் வழிபாட்டு ஏற்பாடுகள் குறித்து பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 21ஆம் திகதி முடிவடையும் றமழான் காலத்தில், முஸ்லிம் அரச ஊழியர்கள் தொழுகை மற்றும் மத வழிபாடுகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய அனைத்து அரச அலுவலகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதற்காக வேலை நேரங்களை மாற்றி அமைத்து வழிபாட்டு நேரத்திற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் விசேட விடுமுறை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், றமழான் பெருநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பாக, அரச சேவை கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிதியச்சட்ட சபைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த முஸ்லிம் ஊழியர்களுக்கு விழா முற்பணம் (festival advance) வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க