மதுபானம் வாங்க சொந்த மகனையே விற்ற தாய் – தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

இரண்டு பெண்களின் உதவியுடன், அந்த குழந்தையை மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த ஒரு பொறியியல் நிறுவன ஊழியரிடம் 2.4 இலட்சம் இந்திய ரூபாய்க்கு விற்றுவிட்டார்.


மதுபானம் வாங்க சொந்த மகனையே விற்ற தாய் – தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் – லெட்சுமி தம்பதிக்கு இரண்டு மாத பருவத்தில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்தக் குழந்தையைத் தாயார் மதுபானம் வாங்குவதற்காக விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாயான லெட்சுமி, கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, மது வாங்க பணம் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவருக்குத் தெரியாமல் தனது இரண்டு மாத பருவ மகனை அழைத்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர், இரண்டு பெண்களின் உதவியுடன், அந்த குழந்தையை மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த ஒரு பொறியியல் நிறுவன ஊழியரிடம் 2.4 இலட்சம் இந்திய ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

எனினும், குழந்தையின் தந்தை ஸ்ரீனிவாஸ் காவல் துறையில் புகார் அளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்தனர். அதன் விளைவாக, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், குழந்தையை விற்ற தாயார் லெட்சுமி, குழந்தையை வாங்கிய நபர், அத்துடன் இடைத்தரகர்களாக செயல்பட்ட இரு பெண்கள் உட்பட பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மதுப் பழக்கத்தின் அழிவுத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க