மஹிந்தவுக்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு; வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்கள் சந்திக்க வருவதால், பொருத்தமான சூழலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கு கொழும்பில் வீடு தேடும் பணியில் விசேட குழு; வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் மிகவும் பொருத்தமான வீடு ஒன்றை  சிறப்பு குழு ஒன்று தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரமுகர்கள் சந்திக்க வருவதால், பொருத்தமான சூழலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வீதி வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், மிக விரைவில் பொருத்தமான வீடு தெரிவுசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

இந்தநிலையில், தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து நலம் விசாரித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தங்காலை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர