அமெரிக்காவிற்கு 'நோ' சொன்ன ஸ்பெயின்: ஆத்திரத்தில் வர்த்தகத்தைத் துண்டித்த டிரம்ப் - உச்சகட்டப் போர் பதற்றம்!

ஈரான் மீதான தாக்குதலுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின் நாட்டிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் பொருளாதார மற்றும் வர்த்தக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கு 'நோ' சொன்ன ஸ்பெயின்: ஆத்திரத்தில் வர்த்தகத்தைத் துண்டித்த டிரம்ப் - உச்சகட்டப் போர் பதற்றம்!

ஈரான் மீதான தாக்குதலுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின் நாட்டிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் பொருளாதார மற்றும் வர்த்தக எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினில் உள்ள ரோட்டா (Rota) மற்றும் மோரோன் (Moron) ராணுவத் தளங்களில் நிறுத்தி வைத்து, அங்கிருந்து ஈரானைத் தாக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் தங்களது தளங்களையோ அல்லது ராணுவத் தளவாடங்களையோ பயன்படுத்த ஸ்பெயின் அரசு அதிரடியாகத் தடை விதித்தது. ஸ்பெயினின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த டிரம்ப், அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய டிரம்ப், ராணுவ ரீதியாக உதவ மறுத்த ஸ்பெயினுடன் இனி எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும், அமெரிக்கா நினைத்தால் யாரையும் கேட்காமல் அந்தத் தளங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்றும் சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர