கனடா–அலாஸ்கா எல்லை அருகே ரிக்டர் 7.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சேதமோ சுனாமியோ இல்லை

அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் (USGS) இந்நிலநடுக்கத்தின் அளவை ரிக்டர் அளவுக்கோலில் 7.0 ஆக அறிவித்துள்ளது.

கனடா–அலாஸ்கா எல்லை அருகே ரிக்டர் 7.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சேதமோ சுனாமியோ இல்லை

கனடாவின் யூகான் பிராந்தியம் மற்றும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் இடையேயான எல்லைப் பகுதியில் சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் (USGS) இந்நிலநடுக்கத்தின் அளவை ரிக்டர் அளவுக்கோலில் 7.0 ஆக அறிவித்துள்ளது.

இருப்பினும், இதுவரை எந்தவித சேதமோ, உயிரிழப்போ அல்லது சுனாமி எச்சரிக்கையோ வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

USGS வெளியிட்ட தகவல்படி, நிலநடுக்கத்தின் மையம் அலாஸ்காவின் ஜூனோவிலிருந்து சுமார் 230 மைல்கள் (370 கிமீ) வடமேற்கேயும், கனடாவின் யூகான் பகுதியிலுள்ள வைட்ஹார்ஸிலிருந்து 155 மைல்கள் (250 கிமீ) மேற்கேயும் அமைந்துள்ளது.

கனடாவின் இயற்கை வளங்கள் துறையின் நில அதிர்வு நிபுணர் ஆலிசன் பட் கூறுகையில்,

“இந்த நிலநடுக்கம் பாதித்த யூகான் பகுதி மலைப்பாங்கானதும், மக்கள் அடர்த்தி மிகக் குறைந்ததுமான இடம். இங்கு கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை” என்றார்.