முத்து அணிந்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் ராசிகள் – உங்க ராசி இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி ரத்தினங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சந்திரனை பிரதிபலிக்கும் ரத்தினமாக முத்து கருதப்படுகிறது. சந்திரன் மன அமைதி, உணர்ச்சி மற்றும் குளிர்ச்சியை குறிக்கும் கிரகமாக இருப்பதால், சில ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் ஆதிபதியாக இருந்தாலும், இவர்களின் நான்காம் வீட்டை சந்திரன் ஆள்கிறார். நான்காம் வீடு வீடு, நிலம், தாய் மற்றும் சுகபோகங்களை குறிக்கிறது. மேஷ ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் சொத்து தொடர்பான பிரச்சினைகள் குறையும். தாயுடன் உறவு வலுப்பெறும். மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஆதிபதியாக இருப்பதால், முத்து இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் ரத்தினமாக கருதப்படுகிறது. முத்து அணிவதால் கோபம் குறைந்து மன அமைதி கிடைக்கும். இதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கலான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்க உதவும் என நம்பப்படுகிறது.
விருச்சிக ராசியில் சந்திரன் பலவீனமாக இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சில நேரங்களில் மன குழப்பம் மற்றும் தேவையற்ற பயம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். முத்து அணிவதால் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்டிருந்த காரியங்கள் முன்னேறும். உடல்நல பிரச்சினைகள் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
மீன ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக விளங்குகிறார். இந்த வீடு கல்வி, புத்திசாலித்தனம் மற்றும் பூர்வ புண்ணியத்தை குறிக்கிறது. மீன ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஜோதிட நம்பிக்கையில் கூறப்படுகிறது.