ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல் – நாடு முழுவதும் திடீர் மின்தடை

ஈராக்கில் வசித்து வரும் அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த அறிவிப்பில், சூழ்நிலை பாதுகாப்பானதாக மாறும் வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து தாங்கள் இருக்கும் இடங்களிலேயே தங்கியிருக்குமாறும் அமெரிக்கப் பிரஜைகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈராக்கில் நாடு முழுவதும் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஈராக்கின் அனைத்து மாகாணங்களிலும் மின்சார வலையமைப்பு முழுமையாக செயலிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த திடீர் மின்தடை ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர