முடி உதிர்வுக்கு தீர்வு: முழங்கால் வரை முடி வளர கறிவேப்பிலை பயன்படுத்தும் எளிய முறை
இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக முடி உதிர்வு உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசு போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகரித்து வருகிறது.
இந்த பிரச்சனைக்கு இயற்கையான தீர்வாக கறிவேப்பிலை பயன்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் முடி வேர் பகுதியை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

இதற்கு முதலில் மூன்று கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி வெயிலில் நன்கு உலர வைக்க வேண்டும். பின்னர் அது முழுமையாக காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடியுடன் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்றாக தடவி சுமார் ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்புவைப் பயன்படுத்தி தலைமுடியை கழுவிக்கொள்ளலாம். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.