பாகிஸ்தான் களத்தடுப்பாளர் எறிந்த பந்தில் வெளியேறிய இலங்கை நடுவர்
பாகிஸ்தான் களத்தடுப்பாளரொருவர் எறிந்த பந்து நடுவரைத் தாக்கிய நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
ஆசிய கிண்ணத் தொடரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் களத்தடுப்பாளரொருவர் எறிந்த பந்து நடுவரைத் தாக்கிய நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
ஐ.அ. அமீரகத்தின் ஆறாவது ஓவரின்போது பந்துவீசிய சை அயூப்பை நோக்கி எறியப்பட்ட பந்தானது இலங்கை நடுவர் ருச்சிர பள்ளியாகுருகேயின் இடது காதுப் பகுதியில் தாக்கியது.
இந்நிலையில் பள்ளியாகுருகேக்கு தலைச்சுற்றல் இருக்கின்றதா என பாகிஸ்தானின் உடற்கூற்று நிபுணர் சோதித்ததுடன், முற்பாதுகாப்பு காரணமாக அவர் களத்தை விட்டு வெளியேறினார்.
அந்தவகையில் பள்ளியாகுருகேவுக்கு பதிலாக பங்களாதேஷின் மேலதிக நடுவர் கஸி சொஹெல் நடுவராக பணியாற்றினார்.
Editorial Staff