சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

Published on: 09 Nov 2025, 02:33 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தனர்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்த அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் இன்றைய தினம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW