சாப்பாட்டுக்கு காசு இல்ல.. தெருவில் வேதனையோடு நடந்தேன்.. சீரியல் நடிகை பேட்டி!

சின்னத்திரை நடிகைகளில் ஒருவரான நடிகை ஸ்வாதி. ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமான இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


சாப்பாட்டுக்கு காசு இல்ல.. தெருவில் வேதனையோடு நடந்தேன்.. சீரியல் நடிகை பேட்டி!

சின்னத்திரை நடிகைகளில் ஒருவரான நடிகை ஸ்வாதி. ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் அறிமுகமான இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், நடிகையானது பற்றியும் நமக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி : வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பிரச்சனை என்ன?

பதில்: பெற்றோரிடம் இருக்கும் போது அனைத்துமே கம்ஃபர்டபிலாக தான் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் படிப்பு முடிந்து நாம் வெளியில் வந்து தான் ஆக வேண்டும். அப்பொழுது எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால், அதற்காக நான் வெளியில் வந்தேன். இதில் பெற்றோருக்கு விருப்பமில்லை என்றாலும், என்னுடைய ஆசைக்காக என்னை அனுப்பி வைத்தார்கள். 

பெங்களூரில் ஆடிஷன் நடக்கும் போதெல்லாம், நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் அதில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் அப்பா, செலவுக்கு 200 ரூபாய் மட்டும் தான் கொடுப்பார். அந்த பணத்தை வைத்துத்தான் சாப்பிட வேண்டும், பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்.

ஒருமுறை கையில் பணம் இல்லாததால் கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று இருக்கிறேன். கையில் தண்ணியும் இல்லை, காசும் இல்லை, தாங்க முடியாத பசி, யாரிடமாவது பசிக்கிறது என கேட்டு விடலாம் என்கிற அளவுக்கு பசி இருந்தது. ஆனாலும், அதை எல்லாம் கடந்து சென்ற அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் இருப்பதை பார்க்கும்போது கடவுள் எனக்காக ஒரு நல்ல வழியை காட்டி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. நான் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.

கேள்வி: உங்களுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? இல்லை பெற்றோருக்கு பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா?

பதில்: திருமணம் என்பது ஒரு நல்ல விஷயம் தான். வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டால் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால். சரியாக அமையவில்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது. இதனால், திருமணம் செய்து கொள்வதற்கு தாமதமானாலும் எந்த பிரச்சனை இல்லை. பொருமையாக காத்திருந்து பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 

ஒருவேளை உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அப்படியே விட்டு விடுங்கள். நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்ல மாட்டேன், ஐயோ வயதாகிவிட்டது சீக்கிரமாக கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன்.

திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால், அரேஞ்ச் மேரேஜில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவரை பார்த்தவுடன் அவர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், அரேஞ்ச் மேரேஜில் தான் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும். என்னை பொருத்தவரை அதில் உடன்பாடு இல்லை. வீட்டில் இப்போது வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 

எப்போதுமே ஏதாவது போட்டோவை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இப்போது எனக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று நடிகை ஸ்வாதி அந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க