ஆசியக் கிண்ணம் 2025: சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி

அமீரகத்துடனான குழு ஏ போட்டியில் வென்றதை அடுத்து, ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

ஆசியக் கிண்ணம் 2025: சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஐ.அ. அமீரகத்துடனான குழு ஏ போட்டியில் வென்றதை அடுத்து, ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், ஜுனைட் சித்திக் (4), துருவ் பரஷார், சிம்ரஞ்சித் சிங்கிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில்,  பக்கர் ஸமமின் 50 (36), ஷகீன் ஷா அஃப்ரிடியின் ஆட்டமிழக்காத 29 (14) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம், ஷகீன் ஷா அஃப்ரிடி (2), அப்ரார் அஹ்மட் (2), சைம் அயூப்,  ஹரிஸ் றாப் (2), அணித்தலைவர் சல்மான் அக்ஹாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ராகுல் சோப்ரா 35 (35) ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் நாயகனாக ஷகீன் ஷா அஃப்ரிடி தெரிவானார்.