இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது 34 வயதான கணவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் உயிரிழப்பு; மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் 32 வயதான தாய் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது 34 வயதான கணவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்னின் 12, 10 மற்றும் 5 வயதான மூன்று ஆண் பிள்ளைகளும்  இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இறந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க