குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்... மனைவியின் உயிரை பறித்த கணவன்
மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மீரிகம ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு நேற்று (18) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் மீரிகம ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.