அறுவை சிகிச்சை நடுவே செவிலியருடன் உறவு: மருத்துவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி
பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை நடுவே நோயாளியை விட்டுவிட்டு, செவிலியருடன் தகாத உறவில் ஈடுபட்ட மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை நடுவே நோயாளியை விட்டுவிட்டு, செவிலியருடன் தகாத உறவில் ஈடுபட்ட மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சுஹைல் அஞ்சும், 2023 ஆம் ஆண்டில் Tameside பொது மருத்துவமனையில் பணிபுரிந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவர் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த நிலையில், அந்த நோயாளியை விட்டுவிட்டு, மற்றொரு அறையில் ஒரு செவிலியருடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அஞ்சும், தனது இந்தச் செயலை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் அந்தச் செவிலியரும் தகாத நிலையில் இருந்தபோது மற்றொரு செவிலியரால் பிடிபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் உடனடியாக மருத்துவமனையின் மேலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அஞ்சும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று அங்கு பணியாற்றத் தொடங்கினார்.
இச்சம்பவம் பிரித்தானிய மருத்துவ தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், அஞ்சுமின் செயல் "கேவலமான தவறு" என்று கருதப்பட்டது. இருப்பினும், இந்தத் தவறு மீண்டும் நடைபெறும் அபாயம் குறைவாக இருப்பதால், அவருடைய மருத்துவத் தகுதி பாதிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் தீர்மானித்தது.
இதனால், அவருக்கு மீண்டும் பிரித்தானியாவில் மருத்துவப் பணியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது பதிவு மீது இரண்டு ஆண்டுகளுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை இடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நோயாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவ அறையில் நடந்த இச்செயல் மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது.