மறுமணம் செய்த மறுநாள் 75 வயது முதியவர் மர்ம மரணம்: சந்தேகத்தால் இறுதிச் சடங்குகள் நிறுத்தம்!
மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த 75 வயதான சங்ருராம், 35 வயதான பெண்ணை மறுமணம் செய்த மறுநாளே திடீரென உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த 75 வயதான சங்ருராம், 35 வயதான பெண்ணை மறுமணம் செய்த மறுநாளே திடீரென உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் இறுதிச் சடங்குகளை நிறுத்தி, காவல்துறை விசாரணையை நாடியுள்ளனர்.
75 வயதான முதியவர் சங்ருராம், தனது முதல் மனைவியை இழந்து ஒரு வருட காலத்திற்கும் மேலாகத் தனிமையில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல், அவர் சிரமப்பட்டு (விசாயம் செய்து) வாழ்க்கையை நடத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த 29 ஆம் திகதியன்று, சங்ருராம் ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். இந்தத் திருமணத்திற்கு முதியவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
முதியவர் மறுமணம் செய்த மறுநாளே மரணமடைந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சந்தேகத்தின் காரணமாக, அவர்கள் இறுதிச் சடங்குகளை நடத்துவதை நிறுத்திவிட்டனர்.
தற்போது, சங்ருராமின் மரணம் குறித்து காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.