மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும் - அமைச்சர் தெரிவிப்பு

Published on: 03 Oct 2025, 01:55 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும் - அமைச்சர் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன்படி, மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.

அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW