ரோபோ ஷங்கர் இந்த நிலைக்கு காரணமே அந்த விஷயம் தான் - பிரபல நடிகர்

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர், தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல காமெடியனாக வலம் வந்தார்.


ரோபோ ஷங்கர் இந்த நிலைக்கு காரணமே அந்த விஷயம் தான் - பிரபல நடிகர்

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர், தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல காமெடியனாக வலம் வந்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் நடிக்க தொடங்கினார், ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு காரணமே அந்த விஷயம் தான் என நடிகர் இளவரசு கூறியுள்ளார். அதில் அவர், ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணென் ஊற்றி அதனை துடைத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணென் பட்டதன் காரணமாக அவரது தோல் வலுவிழந்துள்ளது.

இதில் ஏற்பட்ட குறைபாடுகளால் தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம் என நடிகர் இளவரசு கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க