மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை 

பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ்னா 208 விமானத்தால் இயக்கப்படும் தொடக்க சேவை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் பியருக்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சுனில் ஜெயரத்ன மற்றும் பிற பிரமுகர்கள் விமானத்தில் பயணித்தனர். இந்த விமானத்தை கேப்டன் இந்திகா பிரேமதாசவும், இணை விமானியாக இசுரு முனசிங்கவும் இயக்கினர்.