'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதும் தேதி இதுதான்
செப்டம்பர் 21 சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதி நேரத்தில் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில், ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
Editorial Staff