நீச்சல் குளத்தில் விழுந்த மாணவனுக்கு மூளையில் பாதிப்பு
பிறந்தநாள் விழாவுக்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

கொழும்பில் உள்ள நீச்சல் கிளப்பின் நீச்சல் குளத்தில் விழுந்த தனது எட்டு வயது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக குறித்த சிறுவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிறந்தநாள் விழாவுக்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்தின் போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.