எப்ஸ்டீன் சர்ச்சை எதிரொலி – ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து? அடுத்த பிரதமர் குறித்து பரபரப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவி குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.


எப்ஸ்டீன் சர்ச்சை எதிரொலி – ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து? அடுத்த பிரதமர் குறித்து பரபரப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவி குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

லேபர் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி பீற்றர் மாண்டல்சன், முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும் ஆவார். அவரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நியமித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதாக கூறப்படும் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், பீற்றர் மாண்டல்சன் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையே தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரித்தானிய அரசின் சில முக்கிய ஆவணங்கள் எப்ஸ்டீனுடன் பகிரப்பட்டதாக கூறப்படும் மின்னஞ்சல்கள் வெளிவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பீற்றர் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து பிரதமர் ஸ்டார்மருக்கு முன்பே தகவல் இருந்ததாகவும், அதனை அறிந்திருந்தும் அவரை தூதராக நியமித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் வலுத்து வருகின்றன.

இந்த சூழலில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம் தீவிரமாகியுள்ளது. தற்போதைய உள்துறை செயலராக உள்ள ஷபானா மஹ்மூத் பிரதமர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக பார்க்கப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், துணை பிரதமரான ஏஞ்சலா ரெய்னர், சுகாதார செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், ஆற்றல் துறை செயலரான எட் மிலிபேண்ட் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் ஆகியோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான அரசியல் சூழ்நிலை பிரித்தானியாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க