அதிர்ஷ்ட கதவு திறக்கும் 3 ராசிகள்: டிசம்பர் 5 வரை கோடிகளை குவிக்கும் யோகம் யாருக்கு?
அவிட்டம் 3-ஆம் பாதத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் அக்டோபர் 3 முதல் டிசம்பர் 5 வரை அதிர்ஷ்ட யோகம் பெறும் 3 ராசிகள் எவை? முழு பலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் மாயா காரகனாகவும், பிரம்மாண்ட ஆசைகள் மற்றும் திடீர் திருப்பங்களின் காரகனாகவும் விளங்குபவர் நிழல் கிரகமான ராகு பகவான். மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப வாழ்வில் எதிர்பாராத மாற்றங்களையும் தீவிர லட்சியங்களையும் உருவாக்கும் வல்லமை ராகுவுக்கு உண்டு.
தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி செவ்வாயின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். அவர் இந்த நட்சத்திரத்தில் வரும் 2027 ஏப்ரல் வரை தொடர்ந்து பயணிப்பார் என்றாலும், அதற்குள் நிகழும் பாதப் பெயர்ச்சிகள் ராசி மண்டலத்தில் மிக முக்கிய திருப்பங்களை உருவாக்கக்கூடியவை.
அந்த வகையில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சியாகி, வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை அதே பாதத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
செவ்வாயின் நட்சத்திரப் பாதத்தில் நிழல் கிரகமான ராகு சஞ்சரிக்கும் இந்தக் குறுகிய கால கட்டம், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்வில் நீண்டகாலப் பொருளாதார முடக்கங்களை உடைத்தெறிந்து, அபரிமிதமான பண வரவையும் ராஜயோகப் பலன்களையும் வாரி வழங்கவுள்ளது. டிசம்பர் 5 வரை ராகுவின் அருளால் அதிர்ஷ்டத்தின் உச்சியைத் தொடப்போகும் அந்த 3 ராசிகள் குறித்த விரிவான பலன்கள் இதோ.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு அவிட்டம் 3-ஆம் பாதத்தில் நிகழும் ராகுவின் சஞ்சாரம் புதிய சிந்தனைகளையும் தொழில் ரீதியான விஸ்வரூப வளர்ச்சியையும் பெற்றுத் தரும். வழக்கமான முறையிலிருந்து விடுபட்டுப் புதுமையான உத்திகளைக் கையாண்டு தொழிலில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த சவால்களும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி, புதிய சாதனைகளைப் படைப்பதற்கான சூழல் உருவாகும். நிதி நிலைமையில் வியத்தகு முன்னேற்றமும் நிலைத்தன்மையும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக மேம்பட்டு உங்கள் அன்றாடப் பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய அரிய பயண வாய்ப்புகள் கைகூடி வந்து வாழ்வின் புதிய அனுபவங்களையும் ஆதாயங்களையும் தேடித் தரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு ராகுவின் இந்த நட்சத்திரப் பாத மாற்றம் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தும். உங்களின் தன்னம்பிக்கையும் ஆளுமைத் திறனும் பலமடங்கு உயர்ந்து, எந்தவொரு கடினமான பணியையும் மிக எளிதாக முடித்து காட்டுவீர்கள். நீண்ட நாட்களாகத் தீராதிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து, உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நன்மதிப்புடன் கூடிய உயர்பதவிகளை அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய வணிக ஒப்பந்தங்களும் அதிகப்படியான ஆர்டர்களும் கிடைத்து வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொடும். பல வழிகளில் இருந்தும் பண வரவு அதிகரித்து சேமிப்பு உயரும். பெரிய அளவிலான உடல்நலப் பாதிப்புகள் ஏதுமின்றி மனமகிழ்ச்சி கூடும்.
கும்பம்
கும்ப ராசியிலேயே சஞ்சரித்து வரும் ராகு பகவான், அவிட்டம் 3-ஆம் பாதத்தில் பயணிப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்டகால நிதி நெருக்கடிகளிலிருந்து நிரந்தர விடுதலையைத் தரும். உங்கள் வாழ்நாளின் ஆசைகள் மற்றும் இலக்குகள் பலவும் இக்காலகட்டத்தில் ஒவ்வொன்றாக நிறைவேறும். திருமண வாழ்க்கையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து பரஸ்பர அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைத்து இல்லத்திற்குத் தேவையான நவீன ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்குரிய சிறந்த வேலை வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் உங்களின் அசாத்திய செயல்திறன் அங்கீகரிக்கப்பட்டு நற்பெயர் தேடி வரும்.