பாபா வங்காவின் கணிப்பு: செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறும் 4 ராசிகள்!

உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026 செப்டம்பர் மாத கணிப்பின்படி, ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகின்றனர்.


பாபா வங்காவின் கணிப்பு: செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறும் 4 ராசிகள்!

எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்கதரிசிகளில் முக்கியமானவரும், 'பால்கனின் நாஸ்ட்ரடாமஸ்' என்று அழைக்கப்படுபவருமான பாபா வங்கா, உலகின் பல முக்கிய வரலாற்று சம்பவங்களை முன்கூட்டியே கணித்து உலகப்புகழ் பெற்றவர். அவரது கணிப்புகள் எப்போதும் மிகுந்த ஆர்வத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துபவை.

2026–ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான அவரது புதிய கணிப்பு, இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரகங்களின் அமைப்பு இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தைப் பெறப் போகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 2026 சிறப்பான மாதமாக இருக்கும். முதலீடுகள் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளில் லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பெரும் பலன்களை அடைய முடியும். வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளும் அமையும். வாழ்க்கையில் திருப்தி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு செப்டம்பர் மாதம் பணமும் புகழும் தேடி வரும் காலம். தலைமைத்துவப் பண்புகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சி அல்லது பெரிய திட்டம் மூலம் வருமானம் கணிசமாக உயரும். சோம்பலைத் தவிர்த்து, சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுத்தால் செல்வந்தராக மாறலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் துணிச்சலான முடிவுகள் நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் கணிசமான லாபம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு, அல்லது எதிர்காலத்திற்கு உதவும் முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், புதிய வியாபாரம் தொடங்குவதற்கான சிறப்பான காலமுமாக அமையும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். வேலையில் உள்ளவர்கள், திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு சரியான வேலை கிடைக்கும். மரியாதை, புதிய பொறுப்புகள், தலைமைத்துவ திறன் மற்றும் நிர்வாக திறன் வலுவடைந்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க